ஈரோடு: பெருந்துறையில், கடந்த 14-ம் தேதி, 26 வயதான செவிலியரின் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட கொலையில், அவருடன் பணியாற்றியவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவை – சேலம் நெடுஞ்சாலையில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே கடந்த 14-ஆம் தேதி அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் எல்லைக்குட்பட்ட பள்ளகண்டம் மலைப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி, கடந்த 14-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் பள்ளகண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்த இரு வழக்குகளையும் போலீசார் தொடர்புபடுத்திப் பார்த்தபோது உண்மை தெரியவந்தது.
