Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அதிகாரிகள் பலர் செல்போனில் சமூக வலைதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளைச் சேர்ந்த அலுவலர்கள், பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசன்னா ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் பிரதிவிராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், மழைநீரை எவ்வாறு சேமிப்பது, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகள் விளக்கிக் கொண்டிருந்தனர்.

ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் பலர், நிகழ்ச்சியில் கவனம் செலுத்தாமல் செல்போன்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக, சிலர் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் சிலர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் உறக்க நிலைக்கு சென்றனர்.

மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அதிகாரிகளே, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அலட்சியமாகச் செயல்பட்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

error: Content is protected !!
Secret Link