Skip to content

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…. கார் மோதி பெண் பலி… 3 குழந்தைகளின் தாய் மாயம்… திருச்சி க்ரைம்..

பூ மார்க்கெட்டில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.. 

திருச்சி பெரியார் நகர் குழுமிக்கரை ரோடு பிஷப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பாப்பாத்தி ( வயது 76) இவர் தனது மகனுடன் டூவீலரில் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வந்தார். அங்கு பூ மார்க்கெட் உள்ளே சென்றபோது பாப்பாத்தி மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு  ஆஸ்பத்திரிக்கு  கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அவரது மகன் கர்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் எஸ்ஐபிரியா மற்றும் போலீசார் பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கார் மோதி நடந்து சென்ற பெண் பலி..

திருச்சி அரியமங்கலம் மலையப்பன் நகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் சகாயம் செல்வம். இவரது மனைவி ரோசம்மாள் (வயது 55). இவர் திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ரோசம்மாளை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

3 குழந்தைகளின் தாய் மாயம்…

திருச்சி அரியமங்கலம் பட்டையதார் தெருவை சேர்ந்தவர் கமருதின் . இவரது மகன் ரஹ்மத்துல்லாஹ் (வயது 34). குடிப்பழக்கம் உடையவர். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஹமத்துல்லாஹ் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி பரக்கத் நிஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் ஸ்ரீரங்கம் முல்லை நகரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி (40) என்பவர் மாயமானார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் 282 கிராம் தங்க நகைகள் பறிமுதல் …

சிங்கப்பூரிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் ஆண் பயணியொருவர் தனது பேண்ட் (டிக்கெட்) பாக்கெட்டில் மறைத்து தங்கச்சங்கிலிகள் 15, கைச்சங்கிலி (பிரேஸ்லெட்) 3, மோதிரங்கள் 2 என மொத்தம் 282 கிராம் எடையிலான தங்க நகைகளை உரிய அனுமதியின்றி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!