Skip to content
Home » ஒருநாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்…. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி

ஒருநாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்…. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 276 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்..

இந்நிலையில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும் இரண்டாவது மதிப்பெண் பெரும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் பள்ளி மாணவர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 10ம் வகுப்பு மாணவரான முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷன் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜ் இருவரையும் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அதோடு முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷனுக்கு சால்வை

அணிவித்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தார். இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜையும் உதவி தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தார். இன்று ஒரு நாள் மட்டும் பொறுப்புகளை இரு மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் வழங்கி உள்ளார்..

இதுகுறித்து ஒரு நாள் தலைமை ஆசிரியரான தர்ஷன் கூரிகையில்… பள்ளி மாணவ மாணவிகள் இடையே கல்வி ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் கூறியது எங்களுடைய மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் நன்றாக படித்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன் ஆதனால் எனக்கு இன்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற அரசு பள்ளிகளிலும் நடந்தால் எங்களைப் போன்ற மாணவர்களிடையே மேலும் கல்வியை கற்க ஆர்வமும் ஊக்கமும் ஏற்படும் என மாணவர் தெரிவித்துள்ளார்..

அதேபோல் பள்ளி தலைமையாசிரியர் கூரிகையில்… கடந்தாண்டு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றதை விட நடைபாண்டில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என ஊக்கத்தை அளித்து கல்வியை கற்பித்து வருகிறோம் மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியை கற்பித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!