Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகாவில் இரண்டு யானைகள் சண்டையில் ஒரு யானை பலி

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இந்த விபத்து நடந்துள்ளது. இம்முகாமில் உள்ள ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ ஆகிய இரு வளர்ப்பு யானைகளும் ஆற்றில் குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது இரு யானைகளுக்கும் இடையே திடீரென கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ‘கஞ்சன்’ தாக்கியதில் நிலைதடுமாறிய ‘மார்த்தாண்டா’ யானை, ஆற்றுப் பகுதியில் நின்றிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது சரிந்து விழுந்தது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜின்சு (33) என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அங்கு சுற்றுலாச் சென்றிருந்தார். அப்போது திடீரென யானை சரிந்து பெண்ணின் மீது விழுந்ததில்,

உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவரும் குழந்தையும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில் இன்று இரண்டு யானைகள் சண்டையிட்டதில் ஒரு யானை பரிதாபமாக இன்று உயிரிழந்தது.

இச்சம்பவத்திற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு மிக அருகில் செல்வதைத் தவிர்க்கும் வகையில் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!