Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூர் “மனைவியை கொன்று நாடகம்.. கணவன் அதிரடி கைது!

திருவாரூர் “மனைவியை கொன்று நாடகமா?”-கணவன் அதிரடி கைது!

திருவாரூர் மாவட்டம் அடவங்குடியைச் சேர்ந்த மகாதேவி (23) திருப்பூரில் வேலை பார்த்து வந்தார் . அப்போது திருநாகேஸ்வரம் அருகே இளந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு ராமராஜனின் சொந்த ஊரான இளந்துறையில் வசித்து வந்தனர் .

நேற்று காலை ராமராஜனின் மனைவி மகாதேவி எழுந்திருக்காமல் படுத்தே கிடந்துள்ளார் .
ராமராஜனின் தாய் எழுப்பியும் மருமகள் மகாதேவி எழுந்திருக்காமல் இருந்ததால் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இங்கு பரிசோதனை செய்ததில் மகாதேவி ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்ததுடன் மகாதேவியின் உடலை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இது தொடர்பாக திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மகாதேவி இயற்கை மரணம் அடைந்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மகா தேவியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது .

மகாதேவியின் உறவினர் இறந்த மகாதேவியின் தலையில் காயம் உள்ளது .எனவே மகாதேவியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல. கொலை என்று கூறி உடலை வாங்க மறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மகாதேவியின் கணவர் ராமராஜன் மதுவிற்கு அடிமையாகி நேற்று முன்தினம் இரவு மனைவி மகாதேவியை கட்டையால் அடித்துள்ளதார் இதில் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இதனை ராமராஜன் மறைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

ராமராஜன் கட்டையால் அடித்ததில் மகாதேவி தலையில் காயம் ஏற்பட்டு மகாதேவியை மரணம் அடையச் செய்துள்ளது என விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து,
சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, திருநீலக்குடி காவல் நிலையத்தார் ராமராஜனை கைது செய்தனர்.

error: Content is protected !!