Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் கொள்ளை சம்பவம்…சுட்டுப்பிடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடினர். பின்னர் குளத்துபாளையம் பகுதியில், கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து திருடிய 56 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர். அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உ.பி ஜில்லாகாசிபூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் சுட்டதில் காலில் காயமைந்த ஆசிப்புக்கு தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறிதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!