Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்னை மரம் வெட்டும் போது தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

தென்னை மரம் வெட்டும் போது தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள தேரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் ஜெயமுருகன்(54). திருமணம் ஆகாதவர். இவர் தென்னை மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். வீட்டில் தனது மூத்த அண்ணனான பாலமுருகன் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிரபாராத விதமாக தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடன்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link