டில்லியில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நேஹா மீதான ஒருதலைக் காதலால் அவரது வீட்டிற்குச் சென்ற அபினவ் என்ற இளைஞர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நேஹாவின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் யார்? என்றே நேஹாவுக்குத் தெரியாது எனக் கூறப்படுகிறது.
இன்ஸ்டா பிரபலம் மீது ஒருதலைக் காதல்.. இளைஞர் அடித்துக்கொலை
