Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு… தஞ்சை போலீசார் அசத்தல்..

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, பொங்கல் பரிசாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். இருப்பினும் பலரும் ஹெல்மெட் இன்றி பயணித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களை பிடித்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும், சீட்பெல்ட் அணிந்து காரில் பயணிக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு திருக்குறளை கூறி பெட்ரோல் போட்டு சென்ற வாகன ஓட்டிகள்
ஒரு திருக்குறளை கூறி பெட்ரோல் போட்டு சென்ற வாகன ஓட்டிகள்

தஞ்சாவூரில் இன்று திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 நபர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

தஞ்சை போலீஸாரின் நடவடிக்கைக்கு பாராட்டு
தஞ்சை போலீஸாரின் நடவடிக்கைக்கு பாராட்டு
இதில் துணை காவல் கண்காணிப்பாளர் நீலகண்டன், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டோக்கன்களை வழங்கினர். மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், திருவள்ளுவர் தினம் என்பதால் திருக்குறளை ஒன்று சொல்லி தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு சென்றனர். காவல்துறையினரின் இந்த நூதன விழிப்புணர்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!