Skip to content
Home » ஓராண்டு நிறைவு செய்த “டாடா”… நடிகர் கவின் நெகிழ்ச்சி..

ஓராண்டு நிறைவு செய்த “டாடா”… நடிகர் கவின் நெகிழ்ச்சி..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வந்தவுடன் டாடா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கணேஷ் கே பாபு என்பவர் இயக்கி இருந்தார். படத்தில் பிரதீப் ஆண்டனி, மோனிகா சின்னகோட்லா, ஃபௌஸி, ஐஸ்வர்யா பாஸ்கரன், மாஸ்டர் இளன் அர்ஜுனன், வி.டி.வி கணேஷ், கே.பாக்யராஜ், மணிமேகலை உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியானது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் பல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இந்த டாடா திரைப்படம் இதே தினத்தில் (பிப்ரவரி 10)-ஆம் தேதி தான் வெளியானது. படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில். படத்தை பற்றிய விமர்சனங்கள் மற்றும் படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகளை ரசிகர்கள் வெளியீட்டு படத்தினை புகழ்ந்து வருகிறார்கள்.

டாடா திரைப்படம் வெளியாகி 1 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், கவின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அதில் ” இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு ‘டாடா’ நம் வாழ்வில் கொண்டு வந்த உணர்ச்சிகளின் சூறாவளியைப் பிரதிபலிக்கிறது. பயணத்திற்கு நன்றி. கனவுகளைத் துரத்துவதும், மாயாஜாலம் செய்வதும் இதோ” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!