Skip to content
Home » கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 12ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.  அன்றைய தினம் இந்தியா- நெதர்லாந்து மோதும் கடைசி லீக் போட்டி   பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது. நெதர்லாந்து இனி அரையிறுதிக்கு  தகுதி பெறவில்லை. எனவே 12ம் தேதி நடக்கும் போட்டி சம்பிரதாய போட்டி தான். அதன் முடிவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில்  நேற்ற  நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இலங்கையுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டது.

நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கஷ்டமாகி உள்ளது.

பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன்  நாளை மோதவுள்ளது.  ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து  பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். 2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும்.

இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். +0.036 ரன்ரேட்டுடன் உள்ள பாகிஸ்தானுக்கே இந்த நிலைமை என்றால் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.

எனவே   லீக் சுற்றில் முதலிடம் பிடித்துள்ள இந்தியாவும்,  4வது இடத்தில் உள்ள  நியூசிலாந்தும் முதல் அரையிறுதி போட்டியில் வரும் 15ம் தேதி மும்பையில் மோதும் என்பது உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!