Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூத்த பத்திரிக்கையாளர் பாண்டேவின் தந்தை மறைவு… ரஜினி நேரில் அஞ்சலி…

மூத்த பத்திரிக்கையாளரும், சாணக்கியா ஊடகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று இரவு காலமானார். இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது  டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் உள்ள ரங்கராஜ் பாண்டே இல்லத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அவரது தந்தையின் மறைவிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

rajini

rangaraj father

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ரங்கராஜ் பாண்டேவின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து ரங்கராஜ் பாண்டேவை சந்தித்து அவரது தந்தையின் இறப்புக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் பல்வேறு தலைவர்களும் ரங்கராஜ் பாண்டேவின் தந்தையின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!