Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செஞ்சி அருகே பாண்டியர்களின் சின்னங்கள் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே பாண்டியர்களின் சின்னங்கள் கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் அருகிலுள்ள போத்துவாய் கிராம மலைக்குன்றில் 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் கல்வெட்டும், பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜி என்பவர் கொடுத்த தகவலின்பேரில் அரசு கல்லூரி மேனாள் முதல்வர் நெடுஞ்செழியன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

ராமராஜன்பேட்டைக்கும் போத்துவாய் மலைக்கும் இடைப்பட்ட குன்றின் அடிவாரத்தில், சுமார் 10 அடி உயரமும் 25 அடி நீளமும் கொண்ட பாறையில் 20 வரிகளைக் கொண்ட நீண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. விவசாயி ராஜி மற்றும் மாணவர் கோகுல் உதவியுடன் முட்களை அகற்றி, மாவுப்படி மூலம் இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டது.

இக்கல்வெட்டு, 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகதை நாட்டை ஆண்ட வாணர் குலச் சிற்றரசர் ‘பொன்பரப்பின வாணகோவரையனின்’ வீரத்தையும் ஆற்றலையும் புகழும் பாடல்கள் அடங்கியது ஆகும். ‘ஸ்வஸ்தி இராசராச தேவனான பொன்பரப்பினான மகதைப் பெருமாள் கவி’ என்ற தொடக்கத்துடன் மொத்தம் 18 பாடல்கள் வெட்டப்பட்டுள்ளன.மூன்றாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாக இருந்த வாணகோவரையன், சேரர், பாண்டியர்.

வடுகர், மலையன் ஆகியோரை வென்ற போர்க்களக் காட்சிகளையும், அவனது பிறந்த நாள் ‘திருவுத்திராடம்’ என்ற செய்தியையும் இப்பாடல்கள் நயம்படக் கூறுகின்றன. மதுரையில் பாண்டியனுக்கு மகுடம் சூட்ட உறுதுணையாக இருந்த வாணகோவரையனுக்குக் குலோத்துங்க சோழன் ‘பாண்டியன்’ என்ற பட்டம் வழங்கியதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

error: Content is protected !!