Skip to content
Home » சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

  • by Senthil

ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.  பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு  நடைபெற்றது. இந்நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, எம்பி ஜெகத்ரட்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பங்காரு அடிகளார் உடலுக்கு,  கவர்னர் ஆர்.என்.ரவி இறுதி மாரியாதை செய்தார். சித்தர் முறைப்படி 6 மூலிகைகளை மூலம் பங்காரு அடிகளார் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.   பால், பன்னீர் சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர் கொண்டு உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

சித்தர் முறைப்படி பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளாரின் உடல் அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடிகளார் அருள்வாக்கு சொல்லும் இடத்தின் புற்று மண்டபம் கருவறை அருகே  பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதே இடத்தில் பளிங்கு சிலை வைக்கப்பட உள்ளது. ஓம் சக்தி பரா சக்தி என பக்தர்கள் முழக்கம் தெரிவித்தனர். பங்காரு அடிகளாரின் உடலை வணங்கியபடி ஓம் சக்தி பரா சக்தி என பக்தர்கள் உருக்கம். கண்ணீருடன் பிரியாவிடை கொடுக்கும் செவ்வாடை பக்தர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!