திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தஞ்சைக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வரவில்லை என்பதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு
சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்த பயணிகளிடம் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தனர்.
