Skip to content
Home » பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் வகையில் சட்ட விரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்தநிைலயில் திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை ரீல் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

மேலும் நேற்று வெள்ளிக்கிழமை திருச்சி வயலூர் அருகே எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகேஷ் அரிவாளுடன் சுற்றி திரிவதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார் . இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் எட்டரை கடை வீதி பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது முகேஷ் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

கடைவீதியில் சுற்றி திரிந்த முகேஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனை அடுத்து சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோகக்ளை பதிவிடும் நபர்கள் அருவாள், கத்தி, போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்தநாள் விழா மற்றும் பிற விழாக்களில் கேக் வெட்டும் நபர்கள் வில்லன் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் விபரங்களை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Help Line 94874 64651 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். திருச்சி மாவட்ட காவல் துறையின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு குழு எப்போதும் இதனை கண்காணிப்பார்கள் என்றும் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படங்கள் வெளியிடும் நபர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!