Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மக்களுக்கு ஏற்றாக இல்லை

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை என்று கூறி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு போராட்டம்.

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தால் பொதுமக்களுக்கு பயனில்லை என்றும் நகரை விட்டு வெகு தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், நகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சார் பதிவாளர் அலுவலகம் , அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள். நீதிமன்றத்திற்கு வருபவர்கள் மற்றும் வணிக பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் என அனைவரும் பெரும் அல்லல் படுவதாகவும். பட்டுக்கோட்டையில் ஏற்கனவே பெருமாள் கோவில் மகாராஜா சமுத்திரம் காட்டாற்று பாலத்தில் பஸ் கவிழ்ந்து 53 பேர் பலியான நிலையில், அணைக்காடு காட்டாற்று பாலத்தில் பஸ் கவிழ்ந்து எட்டு பேர் பலியான நிலையில், இரண்டு பெரும் விபத்துக்கள் ஆற்றங்கரை பகுதிகளில் நடைபெற்றுள்ளதால் இப்பொழுது புதிய பேருந்து ராஜா மடம் கல்லணை கால்வாய் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பொதுமக்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

பழைய பேருந்து நிலையத்திற்கும், புதிய பேருந்து நிலையத்திற்கும் போதிய இணைப்பு இல்லாமல் உரிய நகர பேருந்து மற்றும் மினி பஸ்கள் விடாமல் , அரசு மற்றும் போக்குவரத்து கழகம் அறிவித்த நிறுத்தங்களில் தனியார் பஸ் நடத்துனர்கள் பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை என்றும், அரசு அறிவித்ததை விட கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்வதாகவும், பேருந்து கிடைக்காத பட்சத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் தொகை வசூல் செய்வதாகவும் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு என்று பொதுமக்களை திரட்டி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி நகராட்சி ஆணையரிடம் பேசிய பொழுது. புதிய பேருந்து நிலையம் நகர சபை கூட்டத்தில் தீர்மானம் வைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கட்டுமான பணிகள் முடிந்து இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இப்பொழுது தெரிவிப்பதன் காரணம் புரியவில்லை என்றார்.

error: Content is protected !!