கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடைபெறும் இவ்விழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. திருப்பதியில் இருந்து வந்த ஆகம ஆலோசகர் மற்றும் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். இரண்டாம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் பூமாலை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் துவக்கம்
