Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது…

தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெற்றால் குறைந்தபட்ச ஓய்வூதியம்.

50% ஓய்வூதியம் வழங்க பணியாளர்களின் பங்களிப்பு 10% ஆக இருக்கும்.

ஓய்வூதியதாரர் மரணித்தால், பரிந்துரைக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.60 % வழங்கப்படும்.

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்திழல் இறக்க நேரிடும்போதும் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம்.

50% ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு.

புதிய ஓய்வூதிய திட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.13,000 கோடி கூடுதல் செலவு.

ஓய்வூதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.11,000 கோடி அரசின் பங்களிப்பாகவும் இருக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!