தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் ஆட்சி நிர்வாக முறை எதிர்க்கட்சிகளால் உற்று நோக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக அரசு மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளைத் தன் வசம் இழுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய அரசியல் சூழலின் பின்னணியில், தற்போதைய தவெக அரசின் நகர்வுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனங்களை இந்த நிகழ்வின் மூலம் பதிவு செய்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதை விட, பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை (எம்எல்ஏக்கள்) ஈர்ப்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தவெக அரசு மற்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்கிறதோ இல்லையோ, அடுத்த கட்சியினரையும் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களையும் தொடர்ந்து கொள்முதல் செய்து வருவதாகக் கேலி செய்தார். மேலும், இந்த அதிருப்தியான சூழலால் தமிழ்நாட்டில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி என்றும் அவர் சூளுரைத்தார்.
“சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். சோஃபா மாடல் ஆட்சிக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருத்தப்படுகின்றனர். அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கொள்முதல் செய்து வருகிறது தவெக அரசு. தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ, இல்லையோ அடுத்த கட்சியினர், எம்எல்ஏவை தொடர்ந்து கொள்முதல் செய்கிறது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்.” என்று உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார்.
