Skip to content
Home » பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில்  மாட்டு பொங்கல் விழா செவ்வாய் கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் செயலர் பி.நீலராஜ் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக இணை வேந்தர் அனந்த லட்சுமி கதிரவன், தனலட்சுமி

சீனிவாசன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நிவானி கதிரவன்,வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன் அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி, மணி மற்றும் ராஜசேகர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாட்டுப்பண்ணையில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு அங்கிருந்த 250க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கொம்புகள் பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி,  சலங்கை கட்டி பொங்கல் ஊட்டப்பட்டது. பின்னர் 1000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல், கரும்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் , தாயைப் போல நமக்கு பால் தரும் கோமாதா மற்றும் உழவர்களின் உற்ற தோழனாய் விளங்கும் கால்நடைகளை வணங்கும் வகையில் மாட்டுப் பொங்கல்,  சாதி, மதம் கடந்து மனித சமுதாயம் சமத்துவத்துடன் வாழ வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் , மொழி , இனம் , நாடு கடந்து அனைவரும் சகோதரர்களாக வாழ வலியுறுத்தும்  சகோதரத்துத்துவ பொங்கல், இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானியங்களின் நற்பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியப் பொங்கல், பூமியில்  அனைத்து விதமான உரியினங்களும் வாழ சக்தியளிக்கும் பிரபஞ்சத்தின் முதன்மை கோளான சூரியனின் ஆற்றலை வணங்கும் வகையில் சூரியப்பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். “கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்” என்று பொங்கல் வாழ்த்துக்களை வேந்தர் அவர்கள் தெரிவித்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!