Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல்..

தமிழகம் முழுவதும் காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் மது வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 15.05.2023 ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மதுவேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி அரசு மதுபானங்களை சில்லறை விலையில் விற்ற விற்ற 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 33.300 லிட்டர் மதிப்புள்ள மதுபானங்கள் பதிவு செய்யப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்ற 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 11.300 லிட்டர் நாட்டு சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நாட்டு சாராயம் விற்ற 2 நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு அனுமதியின்றி கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்து 2 லிட்டர் மதிப்புள்ள கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று15.05.2023 -ம் தேதி மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூபாய். 31,000 மதிப்புள்ள 46.600 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!