கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி ஆலயத்தில் 103 ஆம் ஆண்டு ஆஷாட ஏகாதசி விழா- கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பண்டரிநாதன் தெருவில் குடிகொண்ட அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் 103 ஆம் ஆண்டு ஆசாட ஏகாதசி விழாவை

முன்னிட்டு மூலவர் தாயார் ருக்மணி சமேத பண்டரிநாதனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று.
தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அதை தொடர்ந்து இன்று காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கருவறையில் சென்று சுவாமியை தொட்டு தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாத ஆஷாட ஏகாதசி விழாவை ஒட்டி மூலவரை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆன்மீக பக்தர்கள் நீண்ட வரிசைகள் இன்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
103 ஆம் ஆண்டு கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி பஜனை மடத்தில் நடைபெற்று வரும் ஆஷாட ஏகாதசி விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
