Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றத்தில் நவ.24-ல் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி!

திருப்பரங்குன்றம் தூணில் ஒரு முறை தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள அதே நேரம் கார்த்திகை தீபம் நாளான நவம்பர் 24 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்றும் தீபம் ஏற்ற யாரை அனுமதிக்கலாம் என்று மதுரை ஆட்சியர் முடிவு செய்வார் என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோயில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். கண்டிப்பாக பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தேவைப்பட்டால் CISF படையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் போராட்டம், பேரணி, முழக்கமிடுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 24 அன்று குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தீபத்தூணில் தீபம் ஏற்றிய பிறகு அங்கிருக்கும் நபர்கள் வெளியேற வேண்டும். இது இடைக்கால உத்தரவு, இறுதி உத்தரவாக இதனை எடுத்து கொள்ளக்கூடாது என தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link