Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி… கரூர் கலெக்டரிடம் மனு

வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி-கரூர் கலெக்டரிடம் மனு

தீண்டாமையின் காரணமாக வீடு இடிக்கப்பட்டதாக கூறி: வீட்டு உபயோக பாத்திரங்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கைக்கு குழந்தையுடன் மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட சேனப்பாடி கிராமத்தில்,
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலை செய்து வந்த வந்த ஏழை தொழிலாளர்கள், சாலை ஓரத்தில் சிறிய வீடுகளை அமைத்து இரண்டு தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த இந்த மக்கள், அரசின் மின் இணைப்பு பெற்று மின் கட்டணம் செலுத்தி வந்ததுடன், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் 30 ஆண்டுகளாக முறையாக செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீடுகளுக்கு அருகில் விவசாய நிலம் வைத்திருக்கும் சிலர், வண்டிப்பாதை செல்லும் இடத்தில் சாலை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, அங்கு வசித்து வந்த குடும்பங்களும் தங்களை வெளியேற்றும் முன்பு அரசே மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,நேற்று அரசு அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நான்கு வீடுகளையும் இடித்து அகற்றினர்.

வீட்டில் உள்ள பொருட்களை சாலையில் வைத்து எங்கு செல்வது என்று தெரியாமல் நேற்று இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ளனர்.

தீண்டாமையின் பெயரால் எங்கள் வீடு இடிக்கப்பட்டதாகவும்,
கூலி வேலை செய்வது வருவதால் எங்கு செல்வது என்று தெரியவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தண்ணீர் குடம், குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கையில் எடுத்துக் கொண்டு மாற்று இடம் வழங்க கோரி கரூர் தான்தோன்றிமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!