Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தரைக் கடைகளை அகற்ற வேண்டும்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு

தரைக் கடைகளை அகற்ற வேண்டும்-திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்.காளிமுத்து,செயலாளார் எம்.கிருஷ்ணமூர்த்தி,பொருளாளர் பி.கே.ஆனந்த் ஆகியோர் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் திருச்சி மாநகராட்சிக்கு திரண்டு வந்து ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். அந்தமனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டிற்கு இருபுறமும் நடைமேடை பாதையில் தள்ளு வண்டி கடைகள் தரைக்கடைகள் பெருகிக் கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. அதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் அது சமயம் எங்கள் அனைத்து கடை அருகிலும் தள்ளுவண்டிக் கடைகள் தரைக்கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன இதனால் வியாபாரிகள் அனைவரும் அவரவர் கடைகளுக்கு அளவீடு முத்திரை, தொழில்வரி, எஃப் எஸ் எஸ் ஐ லைசென்ஸ், டிரேடு லைசென்ஸ் மற்றும் கடைவாடகை, கரண்ட் பில் சம்பளம் மற்றும் சட்டப்படியான வரிகள் அரசு மற்றும் மாநகராட்சிக்கு செலுத்தி மிகுந்த சிரமத்துடன் கடை நடத்தி வருகிறோம் மற்றும் ஒவ்வொரு குறுக்கு தெருவிலும் இதே தள்ளுவண்டி தரைக்கடைகள் பெருகி வருகின்றன எங்களது பகுதியில் புதியதாக வார சந்தைகள் மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றது இதனால் எங்களது வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்தும் பொது மக்களுக்கு இடையூறு நீக்கியும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சந்தைகள் நடத்துபவர்கள் மாநகராட்சிக்கு அரசுக்கோ எந்தவித வருமானம் இன்றி தனி நபர் சுயலாபத்திற்காக செய்து வருகின்றனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தில்லை நகர் ,லிங்கம் நகர் ,பாத்திமா நகர் ,ராமலிங்க நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அனுமதி பெறாமல் வாரச்சந்தைகள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் இதனால் உறையூர் தினசரி சந்தை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி வயலூர் ரோடு வியாபாரிகள் சங்கத்தினருடன் இணைந்து ஆணையரிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!