கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பெண் காதலிக்க மறுத்ததால் கார்த்திக் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளார். 2 முறை பெட்ரோல் குண்டுவீசிய வீடியோ வெளியானதை அடுத்து, இளைஞரையும் அவரது நண்பரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் குண்டுவீச்சு..கோவையில் சம்பவம்
