Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தில் இந்துஸ்தான் பெட்ரோலின் நிறுவனத்துடன் இணைந்த ரூ. 1.14 கோடி மதிப்பில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், 22 ஆயிரம் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் அடங்கிய விற்பனை நிலையம் கட்டப்பட்டது.

இந்த பெட்ரோல் பங்க் விற்பனை நிலையத்தினை உணவு துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க் வளாகத்தில் மரக்கன்றுகளையும் அமைச்சர் சக்கரபாணி மற்றும் செந்தில் பாலாஜி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில் கரூர் கலெக்டர் தங்கவேல், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, உணவுப்பொருள் பழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் மோகன், இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் சேலம் முதன்மை மண்டல மேலாளர் அய்யப்பதாஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!