சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முரளிதர மகாலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் முதல் கட்ட பணிகள் 2023-ல் நிறைவடைந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் வகையில் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
