Skip to content
Home » போட்டோ குறித்து சஸ்பென்ஸ் வைக்கும் விஷ்ணு விஷால்…

போட்டோ குறித்து சஸ்பென்ஸ் வைக்கும் விஷ்ணு விஷால்…

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராம்குமார். விஷ்ணு விஷால், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம், மூடநம்பிக்கைக்கு எதிராக பேசியிருந்தது. இந்தப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இருவரும் ‘ராட்சசன்’ எனும் படத்தில் இணைந்தனர். த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ என விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் 2 முக்கியப் படங்களை கொடுத்த இயக்குநர் ராம்குமார், மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் உடன் இணைந்துள்ளார். நகைச்சுவை, த்ரில்லர் பாணியை விட்டு, இப்படத்தில் புதிய கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தனது எக்ஸ் பக்கத்தில் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.
அதில், “ராம்குமார் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக், தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!