Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்… புறா பந்தய போட்டி

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி பாலத்தில் கரூர் திருவை ஸ்ரீ பகவதி அம்மன் புறா பந்தய குழு சார்பில் முதலாம் ஆண்டு புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. கர்ண புறா போட்டி இன்று தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட புறாக்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு புறாக்களை பறக்க விட்டனர்.

இப்போட்டியை குழுவின் மூத்த உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கர்ண புறாவில் ஜாக் சப்ஜா தூமா மூன்று வகை பிரிவுகளில் இந்த கர்ண புறா போட்டியில் கலந்து கொள்கிறது. இந்த கர்ண புறா வெள்ளை நிற கண்களாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் வானில் பறக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு கரணம் அடிப்பதை காட்ட வேண்டும். மூன்று நாட்களில் எந்த புறா வெகு நேரம் வானில் பறக்கிறதோ அந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வெற்றி பெறும் முதல் மூன்று புறாக்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளன. சாதா புறா போட்டி வருகின்ற ஜூலை மாதம் 26-ந்தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!