ஏமன் மற்றும் சோமாலிய கடற்பகுதிகளில் 22 இந்திய மாலுமிகளுடன் 2 வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்து கடத்தப்பட்டுள்ளன. ஏமன் அருகே ‘எம்.டி. சிபு 1’ என்ற கச்சா எண்ணெய் கப்பலை 6 ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதில் 16 இந்தியர்கள் உட்பட 20 பேர் உள்ளனர். சோமாலியாவின் புன்ட்லேண்ட் பகுதியில் ‘M/V LUTUF’ சரக்குக் கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்துள்ளனர். இதில் 6 இந்தியர்கள் உட்பட 10 பேர் உள்ளனர். இந்திய மற்றும் சர்வதேச கடற்படைகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
