Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விபரங்களின் தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.12 கோடி எனவும், 2023 – 24ம் ஆண்டின் வருமானம் ரூ.46.39 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்து ரூ.4.24 கோடியும், அசையா சொத்துக்கள் ரூ.7.74 கோடியும், ரூ.1.15 கோடி மதிப்புள்ள 4,400 கிராம் தங்கமும் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். டில்லியில் பரம்பரை சொத்தாக விவசாய நிலம் மற்றும் வீடு இருப்பதாகவும், இமாச்சல் மாநிலம் ஷிம்லாவில் ரூ.5.63 கோடியில் சொந்த வீடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவர் ராபர்ட் வதேராவுக்கு ரூ.37.90 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.27.64 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரூ.15 லட்சம் கடன் இருப்பதாகவும், அவர் மீது 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வனத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பதையும் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!