Skip to content
Home » மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

  • by Senthil

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடி  பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றி பேசியதாவது:

வணக்கம் என தமிழில் கூறிவிட்டு  எனது மாணவ குடும்பமே என கூறி  பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.  பாரதிதாசன் கல்கலைக்கழகத்திற்கு வந்த முதல் பிரதமர் நான் தான் என்பதில் மகிழ்ச்சி.   புத்தாண்டில்  முதல் நிகழ்ச்சியாக இந்த பட்டமளிப்பு விழாவில்  பங்கேற்றது மகிழ்ச்சி.   மிக அழகிய மாநிலமான  தமிழ்நாட்டில்  இருப்பது மிக்க மகிழ்ச்சி.  பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை. கங்கைகொண்டசோழபுரம் போன்ற  நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின.  வரலாற்றில் பல  மாற்றங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை  படைத்து வருகிறது.  புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசன் கூறினார்.  நீங்கள் கற்ற கல்வி விவசாயிகளுக்கு, வேளாண்மைக்கு கை கொடுக்க வேண்டும்.   நீங்கள் கல்வி அறிவியலுடன் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும்.  பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால் நாடும் சிறந்து விளங்கும்.

இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்க்கின்றன.  பட்டம் பெற்றதுடன்  உங்கள் கல்வி நின்றுவிடுவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும்  தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் மோடி பேசும்போது அடிக்கடி, எனது மாணவ குடும்பமே என  தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!