கோயில்கள் மற்றும் மத சடங்குகளில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்க கோரிய பொதுநல மனுவை, தலையிட முடியாது என கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விலங்குகள் வதை தடுப்பு சட்ட விதிவிலக்கை நீக்க கோரியும், பிரிவு 21-க்கு எதிரானது எனவும் வழக்கறிஞர் ஸ்ருதி பிஸ்ட் மனுவில் வலியுறுத்தியிருந்தார். முன்னதாக விளக்கம் கோரியிருந்த நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன் மற்றும் அபரேஷ் குமார் சிங் அமர்வு, மறு விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விலங்குகள் பலிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
