Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம். உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

ஜனநாயகம் – மதச்சார்பின்மை – மாநில உரிமைகள் – சமத்துவம் – சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம்_ஒன்றாக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!