பிளஸ் 2 திருத்தும் பணி இம்மாத இறுதியில் துவங்கும்

145
Spread the love

 ஊரடங்கு காரணமாக கல்வித் துறை முற்றிலும் முடங்கிக்கிடக்கிறது. தற்போது, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது; இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. மாவட்ட வாரியாக, தேவையான  இட வசதி உள்ள பள்ளிகள், விடை திருத்தும் மையங்களாக தேர்ந்தெடுக்கப்படும் நடைபெற்று வருகிறது. சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்தல் போன்றவை விடைத்தாள் திருத்த மையங்களில், கடைப்பிடிக்கப்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதேபோல, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், முகக் கவசம் வழங்கப்படுவதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, மையங்கள் ஒதுக்கவும் பள்ளி கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

LEAVE A REPLY