Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை-கோவையில் அதிர்ச்சி

வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை-கோவையில் அதிர்ச்சி

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவரது மகன் ராஜா. இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று ராஜா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு வேலை முடிந்து ராஜா வீட்டிற்கு திரும்பி வந்த போது, அங்கு கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். வீட்டிற்குள் அவரது தாய் சாந்தி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் யாரோ வீட்டிற்குள் புகுந்து அவரை தலையில் சரமாரியாக தாக்கி அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் சமீப நாட்களாக தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் கோவையில் 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நவீன் என்பவரும், 6-ம் தேதி அஸ்வின் என்பவரும், ஆகஸ்ட் 10-ம் தேதி அமுதன் என்பவரும் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 4-வதாக சாந்தியும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து அரங்கேறும் இந்த சம்பவங்களால் கோவை மாநகர மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!