Skip to content
Home » ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி…

ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி…

  • by Senthil

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி 12. 40 மணிக்கு தரிசனங்களை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்தார். அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து கும்பிட்டார். அதைத்தொடர்ந்து  வேட்டி, சட்டை உடையை மாற்றிக்கொண்டு கார் மூலம்

ஹெலிபேடு புறப்பட்டார்.  அப்போதும் அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். சரியாக 1 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!