Skip to content
Home » 20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

  • by Senthil

 பிரதமர் மோடி நாளை மறுநாள்  திருச்சி வருகிறார்.  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதரை தரிசித்து விட்டு அவர் ராமேஸ்வரம் செல்கிறார். இதற்காக அவர் நாளை மாலை  சென்னை வருகிறார்.   பிரதமரின்   3 நாள் சுற்றுப்பயண விவரம்  வருமாறு:

பிரதமர் மோடி, நாளை மாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மாலை 4.55 மணிக்கு சென்னை விமான நிலையம்  வந்தடைகிறார்.அங்கிருந்து, ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வருகிறார். அங்கு கேலோ இந்தியா  போட்டியை  தொடங்கி வைத்து பேசுகிறார்.  இரவில்  சென்னை  கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

21ம் தேதி  காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம்  திருச்சி புறப்படுகிறார்.  10.20 மணி திருச்சி வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து  ஹெலிகாப்டரில்  ஸ்ரீரங்கம்  செல்கிறார். இதற்காக கொள்ளிடக்கரையில்   யாத்ரி நிவாஸ் எதிரே  ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான  இடத்தில் ஹெலிபேடு அமைக்கப்படுகிறது. நேற்று முதல் அந்த பணி விறுவிறுப்புடன் நடக்கிறது. இதனை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். 
ஹெலிபேடில் இருந்து  கார் மூலம்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் செல்கிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
 சரியாக 11 மணி  முதல் பகல் 12. 40 வரை அவர் அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று  தரிசனம் செய்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம்  ராமேஸ்வரம் செல்கிறார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம்  செய்யும் பிரதமர்  இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.ராமேஸ்வரத்தில் அன்று இரவு தங்கும் பிரதமர், அடுத்த நாள் காலை அக்னீ தீர்த்த கடலில்  குளிக்கிறார்.  அங்கிருந்து புனித நீரையும் எடுத்து செல்கிறார். பின்னர் அரிச்சல் முனை சென்று கோதண்ட ராமர் கோவிலில், ராமர் பாதை என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார்.இதனை தொடர்ந்து மதுரைக்கு சென்று  அங்கிருந்து தனி  விமானத்தில், மதியம் 12.30 மணியளவில் டில்லிக்கு புறப்படுகிறார். மறுநாள்  அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கிறார். 
பிரதமர்  ஸ்ரீரங்கம் வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கோயில் பகுதியில் உள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கடந்த 2 நாட்களாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.  பிரதமர் வருகையையொட்டி திருச்சி, ஸ்ரீரங்கம்  பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!