Skip to content
Home » திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

  • by Senthil

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் இன்று காலை பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில்  கலந்து கொள்ள பிரதமர் மோடி 11.30 மணிக்கு மேடைக்கு வந்தார்.  அதைத் தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  வரவேற்று பேசினார். மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜ தலைவர் அண்ணாமலை பேசினர். அதைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தினார்.  மகளிர் அணி சார்பில் மோடிக்க பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

சரியாக 12 மணிக்கு பிரதமர் மோடி இந்தியில் பேசத் தொடங்கினார்.  அவர் பேசியதாவது:

தமிழ் மண்ணில் நான் ஒரு  மாற்றத்தை காண்கிறேன்.  இதே கன்னி்யாகுமரியில் இருந்து 1995ல் நான் ஏக்தா யாத்த்ிரை  தொடங்கி காஷ்மீர் சென்றேன். இப்போது காஷ்மீரில் இருந்து  கன்னியாகுமரி வந்து உள்ளேன.   இங்கு பாஜக அலை வீசுகிறது. காங்கிரஸ், திமுக  அடங்கிய இந்தியா கூட்டணியின் கர்வத்தை  தமிழ்நாடு அடக்கும்.  இவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். திமுக கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்றாது.

மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சிக்கு வர நி்னைக்கிறார்கள்.  நாங்கள் 5 ஜி கொண்டு வந்தோம். இவர்கள் 2ஜியில் கொள்ளையடித்தார்கள்.  ஹெலிகாப்டர் வாங்கியதில் இந்தியா கூட்டணி கொள்ளையடித்தார்கள்.   இவர்களால் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடியாது.இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் நீளமானது.  பாரதிய ஜனதா ஏராளமான விமான நிலையங்களை கட்டியது.  கன்னியாகுமரி எப்போதும் பாஜகவுக்கு ஆதரவு தந்துள்ளது. நாங்கள் கன்னியாகுமரியை நேசிக்கிறோம். திமுக கூட்டணி கன்னியாகுமரியை வஞ்சிக்கிறது. திமுக கூட்டணியை வீழ்த்தி நாங்கள் வெற்றி பெறுவோம்.

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் சாலை திட்டத்தை வாஜ்பாய் கொண்டு வந்தார். கேலோ  இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம்.  காமன்வெல்த் போட்டியில்  காங்கிரஸ் ஊழல் செய்தது. தூத்துக்குடி துறைமுகத்தை புதுப்பித்துள்ளோம். மீனவர் நலனுக்காக பாஜக செயல்படுகிறது.  அயோத்தி விழாவை தொலைக்காட்சியில் பார்க்கக்கூட திமுக தடை விதித்தது. தமிழ்நாட்டில் ரயில்வே, சாலைவசதிகள் மேம்படுத்தி வருகிறோம்.  திமுக  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி. தமிழ் பண்பாட்டுக்கு எதிரி. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டது.  நாங்கள் தான் மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தோம்.

தமிழகத்தின் பெருமையை பாதுகாப்பதில் பாஜக முன்னலையில் உள்ளது.  சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டுக்கு திமுக ஒரு அரக்கனாக இருக்கிறது.   திமுக, காங்கிரஸ் கூட்டணி கண்ணில் விழுந்த தூசி. அதை அகற்ற  வேண்டும்.

தமிழ்நாட்டில் எனக்கான ஆதரவைக்கண்டு பலருக்கு தூக்கம் போய்விட்டது. பாஜக பெண்களை மதிக்கிறது. திமுக கூட்டணி பெண்களுக்கு விரோதி.  ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்று  எல்லோருக்கும் தெரியும்.  இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  தமிழக மீனவர்களை நாங்கள் தான் மீட்டோம்.  நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். என்னால் தமிழ் சரியாக பேச முடியவில்லை.  இனி நான் புதிய டெக்னாலஜி மூலம் தமிழில் பேசுவேன்.   திமுக செய்த பாவ கணக்கிறகு   பதில் கூற வேண்டும்.  நமோ இன் தமிழ் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் மோடியின் தமிழ் உரையை கேட்கலாம். தமிழக மீனவர்கள்  கைது செய்யப்படுவதற்கு  திமுக, காங்கி்ரஸ் செய்த தவறுதான்  காரணம்.  தமிழ் மக்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

இவ்வாறு மோடி பேசி்னார்.   சுமார் 40 நிமிடங்கள் அவரது உரை இடம் பெற்றது. பிரதமர்  பேசி முடித்ததும், சரத்குமார், ராதிகாவை,  அண்ணாமலை அழைத்து மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் நயினார் நாகேந்திரன்,    விஜயதரணி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!