பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ரங்கா ரங்கா கோபுரம் வழியாக ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். கோவிலுக்கு வந்ததும் பிரதமர் தமிழ் மரபுபடி வேட்டி, சட்டை அணிந்து பட்டு வஸ்திரத்தால் மேலே போர்த்திக்கொண்டார். பிரதமரை சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு சந்நிதியாக நடந்து
சென்று பிரதமர் வழிபட்டார். 

பின்னர் கோவில் யானை ஆண்டாள் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு வந்தார். பாகன் ஒரு தட்டில் வைத்திருந்த அவுத் ஆர்கன் இசை கருவியை எடுத்து ஆண்டாளிடம் பிரதமர் கொடுத்தார். ஆண்டாள் மவுத் ஆர்கைனை இசையோடு வாசித்தது. அதை பிரதமர் ரசித்து கேட்டார். அதைத்தொடா்ந்து ஆண்டாளிடம் ஆசி பெற்றார். பின்னர்

ஆண்டாளின் துதிக்கையை தடவிக்கொடுத்தார். பிரதமர் வருகைையயொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் கம்பராமாயண பாராயணம் நடைபெற்ற இடத்துக்கு பிரதமர் வந்தார். ஒரு பெண் உள்பட சிலர் பாராயணம் செய்தனர். அவர்களுக்கு எதிரே ஒரு சிறிய இருக்கை போடப்பட்டு இருந்தது. அதில் பிரதமர் மோடி அமர்ந்து கம்பராமாயணத்தை மனமுருக பாராயணம் செய்தாா்.




