Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தீபாவளி கடைகளுக்கு பொது ஏலம் கோரி பாமக மனு!

திருச்சியில் தீபாவளி கடைகளுக்கு பொது ஏலம் கோரி பாமக மனு!

திருச்சி கடைவீதியில் தற்காலிக தீபாவளி கடைகளுக்கு பொது ஏலம் விட வேண்டும்
கலெக்டரிடம் பாமக கோரிக்கை மனு

திருச்சி மாவட்ட பாமக செயலாளர் பி.கே. திலீப் குமார் அக்கட்சியின் சார்பில் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;-
அடுத்த வாரம் 8 -11 -2026 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.திருச்சி சின்னக்கடை வீதி தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள தரைக்கடைகளை கோர்ட்டு உத்தரவுப்படி மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது இந்த நிலையில் சிங்காரத்தோப்பு பெரிய கடை வீதி பகுதியில் கடந்த ஆட்சி போலவே டெண்டர் விடாமல் இந்த ஆண்டும் தீபாவளிக்கு கடைகளுக்கு ரூ.10,000 என்று தனி நபர்கள் டோக்கன் விற்று வருகிறார்கள். இதனால் உண்மையான வியாபாரிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே தாங்கள் (கலெக்டர்) கூர்ந்து கவனித்து தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் பொது ஏலம் விட வேண்டும் எந்த பாரபட்சமும் இல்லாமல் ஏலத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

error: Content is protected !!