Skip to content
Home » போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் தள்ளுமுள்ளு…பாஜக-வினர் 300 பேர் கைது…..

போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் தள்ளுமுள்ளு…பாஜக-வினர் 300 பேர் கைது…..

நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை ஒரத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ளார் மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவு உள்ளிட்டவை இடம் பெயர்வதால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே இதனை மாற்ற முயற்சிக்கும் அரசை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். பாஜகவினரின் போராட்டம் காரணமாகஅப்பகுதியில் பெரும்

வாகன போக்குவரத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன், போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் போராடுங்கள் என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பாஜகவினர் திடீரென போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன் மற்றும் மாவட்ட தலைவர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அவரை கைது செய்ய விடாமல் பெண்கள் சூழ்ந்து கொண்டு போலீசாருக்கு கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகவும் குண்டுகட்டாக இழுத்து வந்து கைது செய்தனர். பாஜகவினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகை தலைமை மருத்துவமனை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை இடமாற்றம்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!