Skip to content
Home » மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவரது மகள்  லாரா(17) பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று இரவு  வீட்டில் உள்ள தனது அறையில் உள்ள மின் விசிறியில் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   இன்று காலை வெகுநேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  பின்னர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள்  லாரா  தற்கொலை செய்து கொண்ட அறையை ஆய்வு செய்தனர். அங்குள்ள தடயங்களை அவர்கள் சேகரித்தனர். மகள் தற்கொலை தொடர்பாக விஜய் ஆண்டனி, அவரது மனைவி மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் ஆகியோரிடமும்  போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

லாரா கடந்த ஒருவருடமான மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நோய்க்காக  எந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்றார் , என்ன மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டார் என  போலீசார் விசாரித்தனர்.  சம்பந்தப்பட்ட  டாக்டரிடமும் இது தொடர்பாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!