Skip to content
Home » பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை கடந்த ஜனவரி இறுதியில் முறித்து கொண்ட நிதிஷ் குமார், மகா கூட்டணியில் இருந்து விலகியதுடன், பின்னர் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 9-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் புதிய அரசை அமைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த சூழலில், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர்களில் ஒருவரும்,  பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியுயான தேஜஸ்வி யாதவின், பாட்னா  வீடு முன் நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அக்கட்சி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஆயிரக்கணக்கான போலீசாரை நிதிஷ் குமார் அனுப்பி வைத்திருக்கிறார். தேஜஸ்வியின் வீட்டை சுற்றி அனைத்து பகுதிகளிலும் அவர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏதேனும் கூறி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த விரும்புகின்றனர் என தெரிவித்து உள்ளது.

பீகார் மக்கள் இதனை கவனித்து கொண்டிருக்கின்றனர். பயந்துபோய், குனிந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல . கொள்கைக்கான இந்த போராட்டத்தில் நாங்கள் போராடி, வெல்வோம். ஏனெனில், போலீசாரின் இந்த ஒடுக்குமுறையை, நீதியை விரும்பும் மக்கள் எதிர்ப்பார்கள் என்றும் தெரிவித்து உள்ளது. எனினும், எம்.எல்.ஏ.க்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் அவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், தேஜஸ்வியின் வீடு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தேஜஸ்வி யாதவி எம்.எல்.ஏக்களை கடத்தவும், அவர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கவும்,  நிதிஷ்  இந்த ஏற்பாட்டை செய்துள்ளார் என   ஆர்ஜேடி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!