Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விபத்தான வண்டியை எடுக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தேவன் மகன் சிரஞ்சீவி (24) என்பவரும் அவரது அண்ணனும் கடந்த 2 இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த நபர் விபத்திற்கு பிறகு 3 நாட்கள் கழித்து இறந்து உள்ளார். அதன் பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனத்தை வெளியில் எடுப்பதற்காக பாதிக்கப்பட்ட வாலிபர் சென்றுள்ளார். அவரிடம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒருவர் ஏற்கனவே பத்தாயிரம் பெற்றுக்கொண்ட நிலையில் இன்று விபத்துக்குள்ளான வண்டியை எடுத்துச் செல்வதற்காக மேலும் 5000 வாங்கியுள்ளார். லஞ்ச பணத்தை கையில் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வண்டியை விற்பனை செய்தாலே 15 ஆயிரத்திற்கு தான் போகும் அந்த வண்டியை வெளியே எடுக்க போலீசார் 15 ஆயிரம் லஞ்சம் பெற்றது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!