தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவ.22) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட 6,647 மையங்களில் நடைபெறும் இம்முகாமில், மொத்தம் 9.16 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டத்தில் 22ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
