Skip to content
Home » 2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Senthil

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி்ய என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  மாதப்பூரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.   திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த  பிரதமர் அங்கிருந்து  ஹெலிகாப்டரில் பல்லடம் வந்தார். அங்கிருந்து திறந்த காரில் பொதுக்கூட்ட திடலுக்கு வந்தார். அவருடன்  மத்திய அமைச்சர் முருகன்,  அண்ணாமலை ஆகியோர் வந்தனர்.

கூட்டம்  3.50 மணிக்கு தொடங்கியது.  மத்திய அமைச்சர் முருகன் வரவேற்று பேசினார்.  அதைத்தொடர்ந்து அண்ணாமலை பேசினார்.  அவர் பேசிவிட்டு மோடி அருகில் வந்து அமர்ந்ததும்  பி்ரதமர் அண்ணாமலையின் கையை பிடித்து  பாராட்டினார்.  சரியாக 4 மணிக்கு வணக்கம் என தமிழில் கூறி, மோடி பேசத் தொடங்கினார்.

அவர் பேசியதாவது:

கொங்கு பகுதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பேசுவது மகிழ்ச்சி.  இது ஜவுளித்தொழில் நிறைந்த பகுதி. தொழில் துறையில் இந்த பகுதி முக்கிய பங்காற்றி வருகிறது.  இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி. உங்களுக்கு  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கிறது என்பது இந்த கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது. 2024ல் தமிழகத்தில் கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படும். பாஜக புதிய சரித்திரம் படைக்க இருக்கிறது.   என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நீங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள். தேசியமே பிரதானம் என  பாஜகவினர்  உழைக்க வேண்டும். டில்லியில் ஏசி அறையில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன.  இந்த யாத்திைர மூலம் பாஜகவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

மண்ணும், கடவுளும் சமம் என பாஜக உழைக்கிறது.  தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது.  தமிழ்மொழி பல்வேறு சிறப்புகளை கொண்டது.  பல ஆண்டுகளாக நான் தமிழ் மண்ணோடு பின்னி பிணைந்திருக்கிறேன். 32 ஆண்டுகளுக்கு முன்  1991ல் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை சென்ற யாத்திரையை நான் தலைமை தாங்கி சென்றேன்.  பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் காஷ்மீரில் தேசியகொடி ஏற்றினோம். தமிழ் பண்பாடு என் மனதுக்கு நெருக்கமானது.

எனது தொகுதியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தினேன்.  தமிழகத்தில்  பாஜக ஆட்சி இல்லாவிட்டாலும், பாஜகவுக்கு தனி இடம் உண்டு.  அரசியலை தாண்டி தமிழ் மக்கள் என்னுடன்  பிணைந்திருக்கிறார்கள்.  தமிழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

தமிழக வளர்ச்சிக்கு  மக்கியத்துவம் கொடுக்கிறோம். திமுக அரசுக்கு   மத்தியகாங்கிரஸ் அரசு கொடுத்ததை விட அதிகமாக கொடுத்து உள்ளோம்.  ஆனால் திமுகவும், காங்கிரசும் நண்பர்களாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ்நாடு வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை.  நாங்கள் 3 மடங்கு அதிகம் கொடுத்துள்ளோம்.தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர்  பாஜக வளர்ச்சியை தடுக்கிறார்கள்.  தமிழக வளர்ச்சிக்கு பாஜக முன்னுரிமை கொடுக்கிறது.

40 லட்சம் பெண்களுக்கு  தமிழகத்தில் எரிவாயு கொடுத்துள்ளோம். இது மோடியின் உத்தரவாதம். இன்னும் பல ஆண்டுகாலம் மோடியின் உத்தரவாதம் தொடரும்.   மோடி உத்தரவாதத்தின் கீழ் இலவச ரேசன் அரிசி கொடுக்கிறோம்.தமிழ்நாட்டிலும் பாஜக மீது நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. நாங்கள்  ஏழைகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்காகவும் செயல்படுகிறோம்.

தமிழகத்தில் எம்.ஜி,ஆர் சிறப்பான ஆட்சி கொடுத்தார்.  எம்.ஜி.ஆர்  குடும்ப ஆட்சி நடத்தி  ஆட்சிக்கு வரவில்லை.   தமிழகத்தில் திமுகவால் ஆட்சிக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.  நல்லாட்சி நடத்தி எம்.ஜி.ஆர் கல்வி, சுகாதாரம் கொடுத்தார். தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜிஆர் நினைத்து பார்க்கிறேன்.  எம்.ஜி,ஆருக்கு பிறகு ஜெயலலிதா சிறந்த ஆட்சி கொடுத்தார்.அரசியல் ரீதியாக நான் ஜெயலலிதாவுடன் பழகிஇருக்கிறேன்.   அதற்காக மகி்ழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதா வாழ் நாள் முழுதும்  தமிழ்  மக்கள் நலனுக்காக  உழைத்தார்.  திமுக எம்.ஜி,.ஆரை  அவமதிக்கிறது.

இந்தியா  கூட்டணி, தமிழகத்தை  சுரண்ட பார்க்கிறது.  ராணுவ தளவாடங்கள் வாங்கி்யதில் கூட ஊழல் செ்யதது காங்கிரஸ்.  தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக நான் அயராது உழைக்கிறேன்.  தமிழகத்தில் கொள்ளையடிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி முயற்சி்செய்கிறது.

இவ்வாறு அவர்  பேசினார்.  அவரது இந்தி பேச்சு தமிழில் மொழி  பெயர்க்கப்பட்டது. மொத்தம் 43 நிமிடம் அவரது உரை இடம் பெற்றது. கூட்டத்தில் கூட்டணி் தலைவர்கள் ஜி.கே. வாசன், பாரிவேந்தர்,  ஜான்பாண்டியன்,  புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் , தேவநாதன்,  செல்லமுத்து,  தமிழருவி மணியன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!